சனி, 6 பிப்ரவரி, 2010

10, பிளஸ் 2 முடித்தவருக்கு புதிய மருத்துவ படிப்புகள்

எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் பேசியதாவது:
எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் ஏதாவது ஒரு துறையில் சிறப்பு படிப்புகளை படித்து, அதுதொடர்பான சிகிச்சையில் ஈடுபடுகின்றனர். பொது மருத்துவம் செய்வதில்லை. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது, சிறப்பு மருத்துவ நிபுணர்கள் தேவைப்பட்டால் கிடைப்பது இல்லை. விபத்து சிகிச்சை பிரிவுக்கு எம்.சிஎச் டிராமோட்டாலஜி என்ற புதிய படிப்பை துவங்க பல்கலை ஆலோசித்து வருகிறது.
தமிழகத்தில் மருத்துவம் படித்தவர்கள், வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றுகின்றனர். கிராமங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது.
பி.எஸ்.சி நர்சிங் படிப்பு முடிக்க நான்கரை ஆண்டு கள் ஆகிறது. நர்சிங் முடித்தவர்களும் வெளிநாட்டுக்கு செல்கின்றனர். பயிற்சி பெற்ற நர்ஸ்கள் போதுமானதாக இல்லை. எனவே தான் நர்சிங் படிப்பை 3 ஆண்டாக குறைத்து, மீதி ஒன்றரை ஆண்டுகள் கிராமங்களில் தங்கி பணியாற்ற பல்கலை. விரைவில் திட்டம் கொண்டு வர உள்ளது. மருத்துவ துறையில் பல்வேறு பிரிவுகளில் ஆட்கள் பற்றாக்குறை போக்க 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு புதிய படிப்புகளை உருவாக்க பல்கலை திட்டமிட்டுள்ளது. வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் ஆட்கள் பற்றாக்குறை நீங்கும்.

0 comments:

கருத்துரையிடுக