சனி, 6 பிப்ரவரி, 2010

குமரியில் நாளை போலியோ முகாம்!

கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வெளியிட்டுள்ள அறிக்கை:
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இளம்பிள்ளைவாத தடுப்பு சொட்டு மருந்து கொடுக்க குமரி மாவட்டத்தில் 2வது கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (7&ந் தேதி) நடைபெறுகிறது. மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 1160 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4640 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்
ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்பட 14 முகாம்களும், உரிய பேருந்து வசதி இல்லாத மலைப்பகுதிகளில் நடமாடும் குழுக்கள் மூலமும் போலியோ சொட்டுமருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக