திங்கள், 2 ஆகஸ்ட், 2010
ஈரானில் நிலநடுக்கம் 274 பேர் காயம்- ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு
ஈரானில் தெற்கு பகுதியில் உள்ள ஹார்முஸ்கான் மற்றும் பார்ஸ் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பின்னர் 11 முறை லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆகவும் அடுத்து 5.2 ஆகவும், பிறகு 4.1 ஆகவும், 3.9 ஆகவும் பதிவாகியிருந்தது. இந்த நில நடுக்கத்தினால் 4 கிராமங்களை சேர்ந்த 15 பேர் காயம் அடைந்தனர் என்றும், சில வீடுகள் இடிந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

0 comments:
கருத்துரையிடுக