குளச்சல் நகர இஸ்லாமிய இளைஞர் முன்னேற்ற சங்க சங்க தலைவர் அப்துல் ஆசிம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் குமரி மாவட்ட புறநகர் பேருந்தில் 50 காசுகள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பாயிண்ட் டு பாயிண்ட், டி.எஸ்.எஸ்., எல்.எஸ்.எஸ்., எஸ்.எஸ்.எஸ். மற்றும் சொகுசு பேருந்துகளில் வெவ்வேறு விதமான கட்டணங்கள் அரசு பேருந்துகளில் வசூலிக்கப்பட்டு வரும் வேளையில் கிராம புறங்களில் அதிகமாக இயங்கக்கூடிய புறநகர் பேருந்துகளில் 50 காசுகள் உயர்த்தியுள்ளது ஏழை மக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் இந்த அறிவிக்கப்படாத கட்டண உயர்வை கண்டிக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் மவுனம் காப்பது வேதனைக்குறியதாகும். எனவே புறநகர் பேருந்துகளில் உயர்த்தி வசூலிக்கும் 50 காசு களை குறைத்து குறைந்த பட்ச கட்டணமாக ரூ. 3.50 தான் வசூலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக