சனி, 29 ஆகஸ்ட், 2009

இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்

இந்தோனேசியா, சீனா நாடுகளில் நேற்று கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது.இந்தோனேசியாவின் சுலவெசி மாகாணத்தில் நேற்று காலை கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது. பூமியில் 670 கி.மீ., ஆழத்தில் மையம் கொண்டு இந்த நில நடுக்கம் உருவானது. கிழக்கு தைமோரில் உள்ள துலி நகரிலும் இந்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இங்குள்ள இரண்டு மாடி கட்டடத்தில் வசித்தவர்கள், இந்த அதிர்வை உணர்ந்ததாகவும், பீதி அடைந்து கட்டடத்தை விட்டு வெளியேறியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், சீனாவின் ஜிங்காய் மகாணத்தில் உள்ள கோல்முட் என்ற நகரிலும் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில், 6.2 ஆக பதிவானது. இதனால், பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இந்த நில நடுக்கத்தில் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட் சேதம் குறித்துஉடனடியாக தகவல் தெரியவில்லை. மேலும் சுனாமி பீதி இல்லை என்றும் கூறப்பட்டது.


0 comments:

கருத்துரையிடுக