ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009
திருவாரூர் மாவட்ட தமுமுக தொண்டரணிச் செயலாளர் படுகொலை
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரைச் சேர்ந்த சகோ. நூர் முஹம்மத் நேற்று தனது வீட்டருகில் உள்ள அன்வரியா பள்ளிவாசலில் நோன்பு திறந்து விட்டு மஃரிப் தொழுகையை நிறைவேற்றி விட்டு வெளியில் வந்தபோது நான்கு பேர் கொண்ட சமூக விரோத கும்பலால் கத்தியால் குத்தப்பட்டு அந்த இடத்திலேயே அநியாயமாக உயிரிழந்துள்ளார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தனது இன்னுயிரை மக்கள் பணியில் இழந்துள்ள சகோதரரின் மறுமை வாழ்க்கையை அல்லாஹ் மேன்மை ஆக்கவும், அவரது குடும்பத்தினர், கழகத்தினர் அனைவரது உள்ளங்கள் அமைதி அடையவும் யாவரும் பிரார்த்திப்போமா
0 comments:
கருத்துரையிடுக