புதன், 9 செப்டம்பர், 2009
அமெரிக்கா எச்1பி விசாவை பெற ஆளில்லை 20 ஆயிரம் விசாக்கள் தேக்கம்
அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கான எச்1பி விசாவைப் பெற போதுமான ஆட்கள் வராததால், இன்னும் 20 ஆயிரம் விசாக்கள் வினியோகிக் கப்படாமல் இருக்கின் றன.அமெரிக்காவில் பணி புரிவதற்காக டாக்டர் கள், தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள், இன்ஜினியர்கள், பேராசிரியர்கள் போன்றவர்களுக்கு, எச்1பி விசா வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், 65 ஆயிரம் எச்1பி விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறன. இந்த விசாவை பெறுவது கடந்த காலத்தில் குதிரைகக் கொம்பாக இருந்தது.
தற்போது, உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக அமெரிக்காவில் நிதி நிறுவனங்களும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மூடப் பட்டுள்ளன. பல நிறுவனங்கள் ஆட் குறைப்பு செய்து விட்டன. இதன் காரணமாக இந்த ஆண்டு எச்1 பி விசா பெறுவதற்கு பெரும்பாலோர் ஆர்வம் காட்டவில்லை. இந்த விசாவை பெறுவதற்கான இறுதி நாள் இம்மாதத்துடன் முடிவடைகிறது.
இருப்பினும், 20 ஆயிரம் எச்1பி விசாக்கள் தரவேண்டி உள்ளன.அதே சமயம், "விசாவுக்கு விண்ணப்பித்து சில காரணங்களால் நிராகரிக் கப்பட்டவர்கள் மீண்டும் இந்த விசாவுக்கு விண்ணப் பிக்கக்கூடாது' என, அமெ ரிக்க தெரிவித்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக