புதன், 23 செப்டம்பர், 2009
பாஸ்போர்ட் விண்ணப்பங்களை அஞ்சல், கூரியரில் அனுப்ப கூடாது - 25ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாஸ்போர்ட் விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்களிடம் இருந்து கவுன்டர்களில் நேரடியாக பெறுதல், மாவட்டங்களில் உள்ள 50 விரைவு அஞ்சல் மையங்கள் மூலம் பெறுதல், அங்கீகரிக்கப்பட்ட டிராவல்ஸ் ஏஜென்சிகள் மூலம் பெறுதல், அஞ்சல் மற்றும் கூரியர் மூலம் பெறுதல் ஆகிய 5 வழியில் பெறப்படு கிறது. பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அஞ்சல் மற்றும் கூரியர் மூலம் விண்ணப்பங்களை அனுப்பும் விண்ணப்பதாரர்கள், கோப்பு பார்வை எண்ணை பெற முடியாமல் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.
அதேபோல், விண்ணப்பதாரர்களுக்கும் இந்த கோப்பு எண்ணை தெரியப்படுத்துவதற்கும், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு பணிச் சுமை யை ஏற்படுத்துகிறது. பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் ஆவணங்களின் நகல் படிகளை மூல ஆவணங்களுடன் சரிபார்க்க இயலாததால், போலி ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படுகின்றன. மாவட்ட அளவில் விண்ணப்பங்களை ஏற்கும் திட்டம் பரவலாக்கப்பட்டு இருப்பதால், விண்ணப்பங்களை அஞ்சல் மற்றும் கூரியர் மூலம் அனுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. தங்களுக்கு அருகில் உள்ள மாவட்ட பாஸ்போர்ட் பிரிவிலோ அல்லது விரைவு அஞ்சல் மையங்களிலோ விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது, வரும் 25ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
Labels:
பாஸ்போர்ட்
0 comments:
கருத்துரையிடுக