ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

யு.எஸ்.சில் 26 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையின்மை!

கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வேலையின்மை சூழலைச் சந்தித்துள்ளது அமெரிக்கா.

நாட்டில் 9.7 சதவிகிதம் பேர் வேலையின்மையால் அவதிப்படுவதாக அமெரிக்க புள்ளிவிவரத் துறை அறிவித்துள்ளது. 1983-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் இந்த அளவு வேலையின்மை ஏற்பட்டுள்ளது அமெரிக்காவில்.

அதேநேரம், கடந்த ஜூலையைவிட ஆகஸ்ட் மாதம் வேலையிழப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஜூலையில் 443000 ஆக இருந்த வேலை இழப்பின் அளவு, ஆகஸ்ட் மாதம் 276000 ஆகக் குறைந்துள்ளது. பொருளாதார மீட்சியைக் காட்டும் ஒரு அளவுகோளாக இதைப் பார்க்க வேண்டும் என புள்ளிவிவரத் துறை கருத்து தெரிவித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக