சனி, 26 செப்டம்பர், 2009

ஏர் இந்தியா பைலட்டுகள் ஸ்டிரைக் - 2 விமானங்கள் ரத்து.

ஜெட் ஏர்வேஸ் நிறுவன பைலட்டுகள் ஸ்டிரைக் சமீபத்தில் ஓய்ந்த நிலையில் தற்போது ஏர் இந்தியா பைலட்டுகள் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். இதன் காரணமாக இன்று இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

உற்பத்தியுடன் கூடிய போனஸில் 50 சதவீதத்தைக் குறைக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு பைலட்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை எதிர்த்து பைலட்டுகளில் ஒரு பிரிவினர் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர்.
இதன் காரணமாக இன்று டெல்லியிலிருந்து மும்பை மற்றும் காபூல் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதில் பயணம் செய்யவிருந்த பயணிகள் வேறு விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காபூல் செல்ல வேண்டிய பயணிகள் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே பைலட்டுகள் சங்க பிரதிநிதி கேப்டன் பல்லா கூறுகையில், ஊதியக் குறைப்பு காரணமாக எந்த பைலட்டுமே வேலை பார்க்கும் மன நிலையில் இல்லை. எனவே யாரும் வேலை செய்ய மாட்டோம் என்று கூறியிருந்தார்.
ஏர் இந்தியா நிறுவனத்தில் 300 எக்சிகியூட்டிவ் பைலட்டுகள் உள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக