ஞாயிறு, 13 செப்டம்பர், 2009
அமெரிக்காவில் நிதி நெருக்கடியால் ஏழைகள் எண்ணிக்கை 3.98 கோடியாக உயர்வு
கடந்த ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, அமெரிக்காவில் மேலும் 25 லட்சம் பேர் ஏழைகளாகி இருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது.
அமெரிக்காவில் நிதி நெருக்கடி காரணமாக, கடந்த ஆண்டில் லட்சக் கணக்கானவர்கள் வேலை இழந்தனர்.
இதனால் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே ஆண்டில் ஏழைகள் அதிகரித்துள்ளனர். 2008ம் ஆண்டில் மட்டும் 25 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டின் புள்ளி விவர அமைப்பு தெரிவிக்கிறது. இதன்மூலம் ஏழைகளின் எண்ணிக்கை 13.2 சதவீதம் உயர்ந்து 3.98 கோடியாகி உள்ளது. 2007ம் ஆண்டில் இது 12.5 சதவீதமாக இருந்தது.
கடந்த ஆண்டில் நடுத்தர மக்களின் சராசரி தலா வருமானமும் 3.6 சதவீதம் குறைந்து ரூ.24.64 லட்சமாகி (ஆண்டுக்கு) உள்ளது.
அடுத்ததாக, 4.63 கோடி மக்களுக்கு உடல்நலக் காப்பீடு வசதி கிடைக்கவில்லை. இது 2007ம் ஆண்டின் 4.57 கோடியைவிட அதிகம். மக்களின் உடல்நலத்தைக் காக்கும் வகையில் சில சீர்திருத்தங்களை கொண்டுவருவது குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் இப்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.
அங்கு கடந்த 2007 டிசம்பர் மாதத்திலிருந்தே நிதி நெருக்கடி நிலவி வந்துள்ளது.
எனினும், 2008 செப்டம்பரில்தான் அது பூதாகரமாக வெடித்தது. 1930ம் ஆண்டுக்கு பிறகு கடந்த ஆண்டில்தான் மிகப்பெரிய நெருக்கடியை அமெரிக்கா சந்தித்த
0 comments:
கருத்துரையிடுக