வியாழன், 24 செப்டம்பர், 2009

இந்தியாவுக்கு 4.3 பில்லியன் டாலர் நிதி: உலக வங்கி ஒப்புதல்




இந்திய பொருளாதாரம் மற்றும் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் 4.3 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட 4 முக்கிய திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவின் நிதி ஆதாரத்திற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் தூணாக விளங்கும் வங்கித் துறைக்கு 2 பில்லியன் டாலர் கடனுதவி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூக வங்கி சேவை, வேலைவாய்ப்பு வளர்ச்சி அதிகரிப்பதுடன், வளர்ந்து வரும் பொருள்தாரமும் வலுப்படும் என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
இதேபோல் இந்திய கட்டமைப்பு நிதி நிறுவனத்திற்கு 1.2 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க உலக வங்கி அனுமதி வழங்கப்பட உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய மின் உற்பத்தி திட்டங்களை மேற்கொண்டு வரும் இந்திய மின் உற்பத்தி கழகத்துக்கு சுமார் 1 பில்லியன் டாலர்கள் வழங்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் சுமார் 2600 கிராமங்களில் மேற்கொள்ளப்பட உள்ள கிராம குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வெளியேற்றம் திட்டத்திற்காக சுமார் 150 மில்லியன் டாலர் நிதியை வழங்கவும் உலக வங்கி ஒப்புக் கொண்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக