ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

ஜஸ்வந்த் சிங் புத்தகம் 49 ஆயிரம் பிரதி விற்பனை

ஜின்னா பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் எழுதி சர்ச்சையை ஏற்படுத்திய புத்தகம் இதுவரை 49 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகி உள்ளதாக அப்புத்தகப் பதிப்பாளர்களான ரூபா நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

லாகூர் மற்றும் கராச்சியிலிருந்து மேலும் தலா 500 புதிய ஆர்டர்கள் வந்துள்ளதாக அந்நிறுவனத்தின் ஆர்.கே.மெஹ்ரா தெரிவித்தார்.

மேலும் இந்த புத்தகம் இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா, யுஎஸ், இங்கிலாந்து மற்றும் கிழக்கத்திய நாடுகளிலும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

பலத்த வரவேற்பு காரணமாக இப்புத்தகம் 20-வது முறையாக மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், தங்கள் நிறுவனத்தின் நான்கு அச்சகங்களும் புத்தக அச்சடிப்பு வேலைகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இவ்வருட இறுதிக்குள் இப்புத்தக விற்பனை ஒரு லட்சம் பிரதிகளைத் தொட்டு விடும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக