சனி, 19 செப்டம்பர், 2009
இந்தோனேஷியா-பாகிஸ்தானில் நிலநடுககம்
இந்தோனஷியாவின் பாலி தீவில் அடுத்தடுத்து சக்தி மிகுந்த நிலநடு்க்கம் தாக்கியது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு தெருக்களில் ஓடினர். இந்த நிலநடுக்கத்தால் 9 பேர் காயமடைந்துள்ளர்.
அந் நாட்டு நேரப்படி இன்று காலை 6 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் கோளில் 6.4 புள்ளிகளாகப் பதிவானது. இதனால் சுனாமி ஏற்படும் என்ற அச்சத்தில் கடலோரப் பகுதி மக்கள் வீடுகளை விட்டு ஓடினர். ஆனால், சுனாமி ஏதும் ஏற்படவில்லை.
உயரமான கட்டங்களில் வசிக்கும் சிலர் கட்டடம் இடிந்து விடும் என்று பயந்து மாடிகளில் இருந்து கீழே குதித்தனர். இதில் 9 பேர் காயமடைந்தனர். இந் நிலையில் இரண்டாவதாக மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்படவே பீதி மேலும் அதிகரித்தது.
பாகிஸ்தானிலும்..
இந் நிலையில் பாகிஸ்தானி்ல் இன்று காலை 10.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. பெஷாவர் உள்ளிட்ட வட மேற்கு பாகிஸ்தானின் பல பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் கோளில் 5.5 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
Labels:
இந்தோனேசியா,
நிலநடுக்கம்,
பாகிஸ்தான்
0 comments:
கருத்துரையிடுக