புதன், 23 செப்டம்பர், 2009
குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு முதல் பலி
மார்த்தாண்டம் அருகே இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி வல்சலகுமாரி (48). பன்றி காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டிருந்த இவர் நாகர்கோவிலில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவர் நாகர்கோவில் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்து போனார். பன்றி காய்ச்சலுக்கு குமரி மாவட்டத்தில் முதல் பலி நடந்துள்ளது.
Labels:
குமரி மாவட்டம்,
பன்றிக் காய்ச்சல்
0 comments:
கருத்துரையிடுக