
வெள்ளி, 4 செப்டம்பர், 2009
சச்சார் கமிட்டி பரிந்துரை நிராகரிப்பு வக்பு சேவைகளுக்கு தனி சிவில் சர்வீஸ் கிடையாது

வக்பு சேவைகளுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று சச்சார் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கவில்லை.
வக்பு வாரிய சட்டம் 1955ன்படி, மத்திய மற்றும் மாநில வக்பு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்றவரோ அல்லது மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் நியமிக்கும் அதிகாரி ஒருவர்தான் இருக்க வேண்டும். அவர் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் சிறுபான்மையினரின் சமுக, பொருளாதார, கல்வி நிலைமை குறித்து ஆய்வு செய்ய நீதிபதி சச்சார் தலைமையில் கமிட்டி ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் நியமித்தார்.
இந்த கமிட்டி தனது அறிக்கையில், நாட்டில் முஸ்லிம் அதிகாரிகள் மிகவும் குறைவாகவே உள்ளனர். மேலும், வக்பு வாரிய தலைமை நிர்வாக அதிகாரி பதவி, நாட்டின் அதிகாரமிக்க பதவியில் ஒன்றாக இல்லை. இதனால் வக்பு வாரியம்தான் பாதிக்கப்படுகிறது.
மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இந்திய வக்பு வாரியத்துக்கான தேர்வு ஒன்றையும் சேர்க்க வேண்டும். இதில் தேர்ச்சி பெறும் முஸ்லிம்கள், வக்பு வாரியங்களின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்காமல் மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
இது பற்றி மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வக்பு வாரியத்துக்கு என்று தனியாக ஒரு தேர்வை சேர்ப்பது பல பிரச்னைகளை ஏற்படுத்தும். அதனால், இந்த கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது என்றார்.
Labels:
சச்சார் கமிட்டி
0 comments:
கருத்துரையிடுக