சனி, 26 செப்டம்பர், 2009

அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட முடியாது: இந்தியா உறுதி




ணு ஆயுதக் குவிப்புத் தடுப்பு உடன்படிக்கையில் (Non Proliferation Treaty - NPT) அனைத்து நாடுகளும் கையெழுத்திட வேண்டும் என்று ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவை (UN Security Council) நிறைவேற்றியத் தீர்மானத்தை ஏற்கப்போவதில்லை என்று இந்தியா அறிவித்துள்ளது.
நியூ யார்க்கில் ஐ.நா.வின் பாதுகாப்பு பேரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அணு ஆயுதக் குவிப்புத் தடுப்பு உடன்படிக்கையில் அனைத்து நாடுகளும் கையெழுத்திட வேண்டும் என்ற தீர்மானம் அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தியப் பிரதமரின் சிறப்புத் தூதர் சியாம் சரண், அணு ஆயுதமற்ற நாடு (Non Nuclear State) என்ற அடிப்படையில் அணு ஆயுதக் குவிப்புத் தடுப்பு உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
“அணு ஆயுதமற்ற உலகை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதே நேரத்தில் இதற்கு மேல் அணு ஆயுத சோதனை நடத்துவது என்பதிலும் நாம் உறுதியாக உள்ளோம்” என்று கூறிய சியாம் சரண், “அணு ஆயுதமற்ற ஒரு நாடாக என்.பி.டி.யில் அங்கம் வகிக்க இந்தியா விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக