மேற்கண்ட தகவலை கன்னியாகுமரி கோட்ட முதுநிலை தபால்துறை கண்காணிப்பாளர் கே.எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளார்.
வெள்ளி, 25 செப்டம்பர், 2009
தக்கலை, மார்த்தாண்டம் தபால் அலுவலகங்களில் சலுகை விலையில் தங்கம் விற்பனை
இந்திய தபால் துறையும், ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து தங்கக்காசு விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. முதல் கட்டமாக கடந்த மார்ச் மாதம் நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை ரூ.55 லட்சம் மதிப்புள்ள 3,100 கிராம் சுத்தமான 24 காரட் தங்கக் காசுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், அட்சயதிருதியை பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற தங்க விற்பனையில் தமிழகத்தில் அதிக தங்கக்காசுகளை விற்று 2-வது இடத்தை பிடித்தது.
இந்த திட்டம் வாடிக்கையாளரின் வசதிக்காக இன்று (வியாழக்கிழமை) முதல் தக்கலை தலைமை தபால் அலுவலகத்திற்கும், மார்த்தாண்டம் தபால் அலுவலகத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 கிராம் தங்க நாணயம் வாங்குபவருக்கு அரை கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத தள்ளுபடி விலையில் தங்கநாணயம் வழங்கப்படும். தங்கம் வாங்குபவர்கள் இந்த இரண்டில் ஏதாவது ஒரு சலுகையை மட்டும் பெற்றுக்கொள்ளலாம். 24.10.2009 வரை இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும்.
மேற்கண்ட தகவலை கன்னியாகுமரி கோட்ட முதுநிலை தபால்துறை கண்காணிப்பாளர் கே.எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட தகவலை கன்னியாகுமரி கோட்ட முதுநிலை தபால்துறை கண்காணிப்பாளர் கே.எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளார்.
Labels:
குமரி மாவட்டம்
0 comments:
கருத்துரையிடுக