
வியாழன், 3 செப்டம்பர், 2009
விஐபிக்கள் பட்டியில் -பின்னுக்குப் போன அம்பானிகள்

உலகின் சக்தி வாய்ந்த விஐபிக்கள் பட்டியலிருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர் அம்பானி சகோதரர்கள்.
அம்பானி சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலே இந்த சறுக்கலுக்கு காரணம் என கூறப்பட்டுளளது.
உலகில் முதல் 100 பவர்புல் விஐபிக்கள் பட்டியலை 'பேஷன்' பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
இதில் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி இருவருமே இடம்பெற்று வந்தனர்.
ஆனால் இப்போது 97வது இடத்துக்கும் கீழே தள்ளப்பட்டுள்ளார் அனில் அம்பானி. முகேஷ் அம்பானியோ பட்டியலிலேயே இல்லை. கடந்த ஆண்டு 67 வது இடத்தில் இருந்தார் முகேஷ்.
சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் நாளுக்குநாள் முற்றி வரும் சண்டையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
0 comments:
கருத்துரையிடுக