சனி, 26 செப்டம்பர், 2009
பெற்றோர்களே உஷார் பிள்ளைகளை அடித்தால் ‘மக்கு’ ஆகிவிடுவார்கள் ஆய்வில் கண்டுபிடிப்பு.
பிள்ளைகளை அடித்தால் அவர்களின் அறிவுக்கூர்மை மழுங்கி விடும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.பிள்ளைகளை வளர்ப்பது ஒரு கலை. பெரும்பாலான பெற்றோர்களுக்கு அது தெரிவதில்லை. எதற்கெடுத்தாலும் அடி, உதை... குத்துதான். படிக்கவில்லையா? சொன்ன பேச்சு கேட்கவில்லையா? தலையில் நாலு கொட்டு...! முதுகுல நாலு குத்து...! பிள்ளைகளை வழிக்கு கொண்டு வர பெற்றோர்கள் கொடுக்கும் ராஜ வைத்தியம் இதுதான். ஆனால், பெற்றோரின் இந்த தண்டனை மனப்பான்மையால் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலமே பழாகிவிடும் என்பதை அவர்கள் அறிவதில்லை.
நியூ ஹம்ஷையர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த முதன்மை விஞ்ஞானி முர்ரே ஸ்டரஸ் தலைமையிலான குழு, ‘பெற்றோரால் அடிக்கடி அடிக்கப்படும் பிள்ளைகள்’ என்ற ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. இதற்காக 1,500 பிள்ளைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் பாதி பேர் 2 முதல் 4 வயதுக்கு உட்பட்டவர்கள். மற்றவர்கள் 5 முதல் 9 வயதுக்கு உட்பட்டவர்கள்.இவர்களில் அடிக்கடி அடிக்கப்படும் பிள்ளைகளுக்கு, மற்ற பிள்ளைகளை விட அறிவுக்கூர்மை குறைவாக இருப்பது தெரிந்தது. உதை வாங்கும் 2 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட அறிவுக்கூர்மை 5 சதவீதம் குறைவாக இருப்பதாகவும், 4 முதல் 9 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் அறிவுக்கூர்மை 2.8 சதவீதம் குறைவாக இருந்தது.
0 comments:
கருத்துரையிடுக