வெள்ளி, 30 அக்டோபர், 2009

சீனாவில் சிங்கியாங் பிரதேசத்தில் 6 முஸ்லிம்களுக்கு மரண தண்டனை.

சீனாவில் சிங்கியாங் மாநிலத்தில் நிகழ்ந்த இன வன்முறைக் குக் காரணமா னவர்கள் என அரச நீதிமன்றம் 6 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இவர் கள் 6 பேரும் உய்கோ இன முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இனக் கலவரங்களில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம் களாக உள்ள நிலையில் முஸ்லிம்களே கலவரத்தை தூண்டியவர்கள் என்று குற்றம் சுமத்தியிருப்பதும் அரசாங்கத்தின் பாராபட்சத்தைக் காட்டுகின்றது என உய்கோ முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவர் எனக் கருதப்படும் லிபியா கதீர் குறிப்பிட்டுள்ளார். சீனாவில் பல்லாண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கதீர், இந்நடவடிக்கை சர்வதேச சட்டங்களை சீனா மீறுவதை எடுத்துக் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக