- தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் வறுத்த அரிசிப் பொடியை சேர்த்து நன்றாக கிளறவும் .
- தீயை அணைத்து அந்த கலவையை சிறிய பந்துக்களாக உருட்டி தனியாக வைக்கவும்.
- மல்லிப்பொடி, மிளகாய் பொடி மஞ்சள் பொடி, பெருஞ்சீரக பொடி, இவை அனைத்தையும் தண்ணீருடன் சேர்த்து தனியாக கலவை செய்து வைக்கவும்.
- சிறிய வெங்காயம், கறுவாவை(3 துண்டுகள்) தேங்காயுடன் சேர்த்து ஈரப்பதம் போகும் வரை வறுக்கவும்.
- பின்னர் எண்ணையை சூடாக்கி அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் கிராம்பு, கறுவாவை(1 துண்டு) இட்டு வதக்கவும்.
- வெங்காயத்தின் நிறம் மாறியவுடன், மசாலா கலவையை இதனுடன் சேர்க்கவும்.
- இதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக சூடாக்கவும்.
- நன்றாக கொதித்தவுடன் நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கு சிறிய பந்துக்களை இதனுடன் சேர்த்து உப்பும் சேர்த்து அது வேகும் வரை அடுப்பில் வைக்கவும்.
- பின்னர் இதனுடன் சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள இறால் அல்லது இறைச்சியை சேர்த்து வேகவைத்து இறக்கவும்,
- சக்கோலி ரெடி
திங்கள், 12 அக்டோபர், 2009
திருவை சமையல்:
சக்கோலி வைப்பது எப்படி ?
வறுத்த அரிப்பொடி- 1 cup
தேங்காய் அரைத்தது - 1/2
சின்ன உள்ளி - 100 Kg
கறுவா - 4 துண்டுகள்
கிராம்பு - 3
மிளகாய் பொடி- 1/2 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 டீ ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
மல்லி பொடி -1/2 டீ ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- 2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
Labels:
திருவிதாங்கோடு
0 comments:
கருத்துரையிடுக