திங்கள், 19 அக்டோபர், 2009
இந்தியாவில் ஓசையின்றி பரவுகிறது பன்றிக்காய்ச்சல்
பெரும் பரபரப்பையும், மக்களிடம் பயத்தையும் ஏற்படுத்தியிருந்த பன்றிக் காய்ச்சல் நோய், தற்போதும் இந்தியாவில் ஓசையின்றி பரவி கொண்டுதான் உள்ளது. பல்வேறு மருத்துவமனைகளிலும் பன்றி காய்ச்சல் சோதனை தினமும் நடந்து கொண்டுதான் உள்ளது. நோயாளிகள் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக் கொண்டுதான் உள்ளனர். பல்வேறு எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த போதும், பன்றிக் காய்ச்சல் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
பன்றிக் காய்ச்சல் பரவ ஆரம்பித்த புதிதில் அது பற்றிய விழிப்புணர்வு தகவல்களும், செய்திகளும் வெளிவந்த வண்ணம் இருந்தன. தற்போது அந்த பரபரப்புக் குறைந்திருந்தாலும், பன்றிக் காய்ச்சல் பரவுவது குறையவில்லை. இதுவரை இந்தியாவில் 67 ஆயிரத்து 612 பேருக்கு பன்றிக் காய்ச்சல் சோதனை நடந்துள்ளது. அவர்களில் 12 ஆயிரத்து 786 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று 43 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கி இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. நேற்று பன்றிக்காய்ச்சலுக்கு 8 பேர் பலியானார்கள். இதில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரும், கேரளாவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர். இவர்களோடு சேர்த்து பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 413 ஆக உயர்ந்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக