வெள்ளி, 30 அக்டோபர், 2009

பொருளாதார பின்னடைவு காரணமாக விவாகரத்துகள் குறைந்தன

அமெரிக்காவில் பொருளாதார பின்னடைவு காரணமாக விவாகரத்துகள் குறைந்து விட்டன என்று வக்கீல்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் 1,600 உறுப்பினர்களிடம் நடத்திய ஆய்வில் பாதிக்கு மேற்பட்டவர்கள் விவாகரத்து வழக்குகள் குறைந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். 2008-ம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் இருந்து விவாகரத்து கோருபவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைந்த அளவில் தான் இருந்தது என்று தெரிவித்தனர்.
பொருளாதார பின்னடைவு காரணமாக வேலை இல்லை. சம்பள குறைப்பு காரணமாக குடும்ப செலவுகளை சமாளிப்பதற்கே மக்கள் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களால் விவாகரத்துக்காக செலவழிக்க பணம் இல்லாததால் ஆண்கள் விவாகரத்துக்கு தயாராக இல்லை. அதுபோல, பொருளாதார தட்டுப்பாடு உள்ள இந்த சூழ்நிலையில் விவாகரத்து கோரினால் குறைந்த அளவே ஜீவனாம்சமாக கிடைக்கும் என்பதால் பெண்களும் விவாகரத்து கோர தயங்குவதும் தான் இந்த அளவு விவாகரத்து குறைந்து போனதற்கு காரணமாக கூறப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக