சனி, 3 அக்டோபர், 2009

யு.எஸ். - வேலையில்லாத் திண்டாட்டம் வரலாறு காணாத அதிகரிப்பு

வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத உச்ச நிலையை எட்டியுள்ளது அமெரிக்காவில். அங்கு தற்போது வேலையில்லாத் திண்டாட்ட அளவு 9.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும்.
சரிந்து போன அமெரிக்க பொருளாதாரம் சற்றே நிமிரத் தொடங்கியுள்ள போதிலும் கூட வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.கடந்த மாதத்தில் மட்டும் 2 லட்சத்து 63 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 9.7 ஆக உயர்ந்தது. 
கட்டுமானம், சில்லறை வர்த்தகம், உற்பத்திப் பிரிவு மற்றும் அரசுத் துறை ஆகியவற்றில்தான் பெருமளவில் வேலையிழப்பு அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் தற்போது வேலையில்லாமல் இருப்போரின் எண்ணிக்கை 1.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

கருத்துரையிடுக