இவர்களை பரமதி பகுதி காவல் துறையினர் பிடித்து கோவா போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர். என்றாலும் இவர்கள் மூவரும் கைது செய்யப்படவில்லை என்றும் காவலில் தான் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர். கடந்த தீபாவளி பண்டிகையின் முந்தின நாள் மாலை இந்துத்துவ தீவிரவாதிகள் நடத்தவிருந்த நாசவேலைகளில் அவர்களே சிக்கி மரணமடைந்தனர். சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பிற்கும் இந்த குண்டு வெடிப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக காவல் துறை கூறுகின்றது. கூவா காவல் துறை சனாதன் சன்ஸ்தாவின் இரு தொண்டர்களை நேற்று மாநிலத்தில் மேலும் நாச வேலைகள் மூலம் குழப்பம் விளைவிக்க திட்டமிட்டதற்காக கைது செய்தது.இந்த கைதுகள் குறித்து காவல் துறை கண்காணிப்பாளரிடம் கேட்டதற்கு, "நேற்று நடந்த இரு கைதுகள் தவிர வேறு எந்த கைதுகளும் நடக்கவில்லை" என்று கூறினார். மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து காவலில் எடுத்துவரப்பட்ட மூவர் பற்றி தகவல் தர மறுத்துவிட்டார்.
காவல் துறை வட்டத்திலிருந்து வந்த செய்தியின் படி, "இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய SIM கார்டுகள் நேற்று கைது செய்யப்பட்ட இருவரின் பெயரில் வாங்கப்பட்டவை" என்று கூறுப்படுகிறது.
0 comments:
கருத்துரையிடுக