ஞாயிறு, 8 நவம்பர், 2009
பெண்களின் பிரசவ கால உயிரிழப்பை குறைப்பது குறித்த மாநாடு
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பெண்கள் கர்ப்ப காலத்திலும் பிரசவத்தின்போதும் வீணாக உயிரிழந்துவரும் அவலத்தைத் தடுப்பதற்கான வழிவகைகள் பற்றி ஆராய்வதற்காக எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் சர்வதேச நாடுகள் பலவற்றின் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. 2015ஆம் ஆண்டுக்குள் தாய்மார்களின் கர்ப்ப கால மற்றும் பேறுகால உயிரி ழப்புகளை மூன்றில் இரண்டு பங்கால் குறைத்துவிடுவது என்ற மில்லேனியம் முன்னேற்ற இலக்கை அடைவதற்குத் தேவையான அரசியல் உறுதிப்பாட்டை யும் நிதியையும் திரட்டுவது என்பதை ஐ.நா.மன்ற மக்கள் நல நிதியத்தின் ஏற்பாட்டில் நடக்கும் இந்தக் கூட்டம் நோக்கமாகக் கொண்டிருந்தது. உலகில் ஆண்-பெண் இடையே சம உரிமை இல்லாதிருப்பது இப்பிரச்சி னையின் மூல காரணம் என ஐ.நா. தாய் நல நிதியத்தின் ஒருங்கிணைப் பாளரான டாக்டர் யீவ்ஸ் பெர்ஜெவின் கூறினார்
0 comments:
கருத்துரையிடுக