வெள்ளி, 6 நவம்பர், 2009

எங்கே அமெரிக்காவின் கலாச்சாரம், மனித நேயம்???

கலாச்சாரத்தில் எங்களது கலாச்சாரமே உயர்ந்தது, எங்களது மக்களே நாகரீகத்தின் உச்சாணிக்கொம்பில் இருப்பவர்கள். மற்றவர்கள் எல்லாம் காட்டு மிராண்டிகள் என்று மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்க மக்களில் ஒருவனது வீட்டில் 11 சடலங்களை கண்டெடுக்கப் பட்டுள்ளன.
அமெரிக்காவின் 50 வயதான அந்தோணி சொவேல் என்பவன் தான் இந்த கொடூரங்களை செய்தவன். இவன் காம வெறியனுமாவான். இவனது மூன்று மாடி வீட்டினுள் சடலங்கள் அங்கும் இங்குமாக கிடந்திருக்கின்றன. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கறுப்பின பெண்களே. இவனது வீட்டின் பல இடங்களிலிருந்து காவல் துறையினர் சடலங்களை எடுத்துள்ளனர். அவன் வீட்டில் இருந்த பாதாள அற்றை ஒன்றில் மண்டை ஓடும் கிடைத்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் காணமல் போனவர்கள் பற்றிய எந்த விசாரணையும் செய்யாமல் இருந்த போலீசாரின் இந்த மெத்தன போக்கே இது போன்றதொரு கொடுமையான சம்பவம் நடந்ததற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.
53 வயது நிறைந்த டோனியா என்ற பெண்மணி போதை மாத்திரைகளுக்கு அடிமையானவர். இவரை காணவில்லை என்று புகார் செய்ததற்கு அவரிடம் இருக்கும் போதை மாத்திரைகள் தீர்ந்து விட்டால் அவர் தானாக வீடு வந்து சேருவார் என்று கூறி டோனியாவின் மகளை போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் இந்த மிருகத்தினால் கொல்லப்பட்டவர்களில் ஒருவராக டோனியாவும் உள்ளார். இவரது கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொல்லப்பட்டதற்கான அடையாளங்கள் இருக்கின்றன. இவரை தனது வீட்டின் கொல்லைப் புறத்தில் புதைத்துள்ளான் இந்த அந்தோணி.
நடந்த விசயங்களை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்று டோனியாவின் மகள் கார்மைகேல் ஜாகப்ஸ் கூறினார். இவனால் கொல்லப்பட்ட பல பெண்கள் விபச்சாரிகளாகவும் போதை மருந்துகளுக்கு அடிமையானவர்களும் தான் என்று கூறப்படுகிறது. பலரின் மனதில் தொலைந்து போன பெண்களை தேடுவதில் காவல் துறையினர் அக்கறை காட்டாததற்கு அவர்கள் கருப்பினத்தை சேர்ந்தவர்களாக இருந்தது தான் காரணமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சுடி மார்டின் என்ற வழக்கறிஞர் கூறியதாவது, "கிளீவ்லாந்து பகுதி காவல் துறையினர் காணாமல் போனவர்கள் சமுதாயத்தின் அடித்தட்டுகளில் உள்ளவர்களாக இருந்தால் அவர்கள் அதனை பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்கள்" என்று கூறுகிறார். சாக ரீட் என்பவர், "அந்த பகுதியில் உள்ள குற்றங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது குறித்து விசாரணை நடத்தப் படவேண்டும்" என்று கூறினார்.
அந்த பகுதி காவல் துறை தலைவர் மைகேல் மெக்கிராத் கூறுகையில், "ஒரு நாளைக்கு 10 பேர் காணாமல் போவதாக எங்களுக்கு புகார்கள் வருகின்றன. ஆனால் பெரும்பாலும் அதில் 90% பேர் 48 மணி நேரத்தில் வீடு திரும்பிவிடுகிறார்கள்" என்று கூறினார். அந்தோணியின் இந்த கொலைக்கான அக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், கொலை, கற்பழிப்பு, ஆட்கடத்தல் ஆகிய குற்றங்களுக்காக அவனுக்கு மரண தண்டனை கிடைக்கலாம் என்று வழக்கறிஞர் பிரைன் முற்பி கூறினார்.
அந்தோணியின் வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம் தான் அவனது இந்த கொலைகளை காட்டிக் கொடுத்துள்ளது. இப்படி ஒரு கொடூர செயலை தன் வீட்டில் வைத்து செய்வதற்கு அவன் வீடு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளது அல்ல. மாறாக அவன் வசிக்கும் பகுதி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இது தான் அமெரிக்காவின் லட்சணம்.

0 comments:

கருத்துரையிடுக