செவ்வாய், 15 டிசம்பர், 2009

மேலும் 3 புதிய கிரகங்களை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்.

சூரியக் குடும்பத்தில் புதிதாக 3 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று சூரியனைப் போலவே உள்ளது. இன்னொன்று பூமியை விட மிக பிரமாண்டமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகங்களை வெறும் கண்களால் பார்க்க முடியும் என வி்ஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸில் உள்ள ஆங்கிலோ - ஆஸ்திரேலிய டெலஸ்கோப் மற்றும் ஹவாயில் உள்ள கெக் டெலஸ்கோப் மூலம் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் இந்த மூன்று கிரகங்களையும் கண்டறிந்துள்ளனர்.
இந்த மூன்று கிரகங்களுமே ஒரு குட்டி சூரியக் குடும்பம் போல காணப்படுகின்றன. 61 விர்ஜினிஸ் என்ற நட்சத்திரத்தைச் சுற்றி இந்த மூன்று கிரகங்களும் காணப்படுகின்றன. பூமியிலிரு்நது 27.8 ஒளியாண்டுகள் தொலைவில்தான் இவை உள்ளன.
இந்த கிரகங்களின் எடை பூமியின் எடையை விட 5.3 மடங்கு முதல் 24.9 மடங்கு வரை அதிகம் உள்ளது.



சூரியனைப் போன்ற நட்சத்திரம் கண்டுபிடிப்பு:
இதேபோல பூமியிலிருந்து 84 ஒளியாண்டு தொலைவில் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தையும் இதே குழு கண்டுபிடித்துள்ளது. இதற்கு 23 லிப்ரே என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் கிறிஸ் டன்னி கூறுகையில், இவை மிகவும் வியப்பாக உள்ளன.
நமது சூரியக் குடும்பத்தில் இடம் பெற்றுள்ள நெப்டியூன் கிரகம், பூமியை விட 17 மடங்கு அதிக எடை கொண்டதாகும்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்களைப் பார்க்கும்போது, சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் அருகாமை கிரகங்கள் அருகே நிறைய இருக்கலாம் எனத் தெரிகிறது.
மேலும் சிறிய கிரகங்களில் கூட மனிதர்கள் வாழ தேவையான தகுதிகள் இருக்கக் கூடும் என்ற புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது இந்த ஆய்வு என்றார்.

0 comments:

கருத்துரையிடுக