ஒவ்வொரு ரேஷன் கடையிலும் தணிக்கையில் விடுபட்ட ரேஷன்கார்டுகளின் எண், பெயர்களை குறிப்பிட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியல் அனைத்து ரேஷன் கடைகளிலும் தற்போது ஒட்டப்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் சரிபார்த்து உடனடியாக ரேஷன்கடையில் இருந்து விண்ணப்பங் களை வாங்கி அங்கேயே விண்ணப்பிக்கலாம். முகவரி மாற்றம் அல்லது பிற காரணங்களால் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்கள் பொருள் நிறுத்தம் உத்தரவு தொடர்பாக மேல் முறை யீடு செய்ய ஏதுவாக இதுவரை பொருள் பெற்று வந்த ரேஷன் கடைகளிலேயே மேல் முறையீடு படிவம் இலவசமாக வழங்கப்படுகிறது.
இப்படிவத்தை பூர்த்தி செய்து ரேஷன் கார்டு ஜெராக்ஸ் மற்றும் இருப்பிட ஆதாரங்களான மின் கணக்கீடு அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி ரசீது, ஓட்டுநர் உரிமம், பாஸ் போர்ட், அஞ்சல்துறை வழங்கும் இருப்பிட அடையாள அட்டை, வங்கி பாஸ்புக் போன்றவற்றில் ஏதாவது ஒன்றின் ஜெராக்ஸை இணைத்து ரேஷன் கடைகளிலேயே கொடுத்து ஒப்புதல் சீட்டு பெற்று கொள்ள வேண்டும்.
முறையீடு மனுக்கள் 31.12.2009ம் தேதிக்குள் கொடுக்கப்பட வேண்டும்.
ரேஷன்கடையில் மனு அளித்த குடும்ப அட்டைகளுக்கு அவர்களது மேல்முறையீடு மீதான இறுதி ஆணை பிறப்பிக்கப்படும் வரை தொடர்ந்து பொருட் கள் வழங்கப்படும். இந்த மனுக்கள் மீது நேரடி விசாரணை செய்து உண் மையில் வசிப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு ரேஷன் கடையில் உரிய முகவரி மாற்றம் செய்து தரப்பட்டு தொடர்ந்து அவர்களுக்கு பொருட்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். வசிக்காத குடும்பங்களுக்குரிய ரேஷன்கார்டுகள் மட்டுமே ரத்து செய்யப்படும்.
எனவே உண்மையான ரேஷன்கார்டுதாரர்கள் எவரும் இதுகுறித்து கவலையடைய தேவை யில்லை. மேலும் பொருள் நிறுத்தம் தொடர்பாக வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு சென்று பொதுமக்கள் அலைய வேண்டியதில்லை என்றும் ரேஷன்கார்டுதாரர்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட வழங்கல் துறை அதிகாரி கள் தெரிவித்தனர்.
0 comments:
கருத்துரையிடுக