தமிழகத்தில் 2010ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இதில் முதற்கட்டமாக வாக்காளர் பட்டியல் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ‘செக்லிஸ்ட் ஏÕ தயாரானது. இது ஊழியர்களிடம் வழங்கப்பட்டு தெரு, ஊர், தொகுதி, பாலினம் குறித்த தவறுகள் திருத்தப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டது. தற்போது திருத்தப்பட்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் இந்த பட்டியல் தயாராகி விட்டது. விடுபட்டுள்ள மாவட்டங்களில் வரும் 25ம் தேதிக்குள் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நாளை முதல் தொடங்கவுள்ளது. ஆசிரியர்கள், பஞ்சாயத்து அலுவலர்கள், பேரூராட்சி, நகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்த உள்ளனர். அவர்கள் வாக்காளர் விபரங்களை சரிபார்த்த வீட்டின் முன்புறம் Ôஸ்டிக்கர்Õ ஒட்டி செல்வர். 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்புக்கு, ஊழியர்களிடம் Ôபடிவம் பிÕ பெற்று விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபடும் களப்பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளை தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது. அவர்கள் கழுத்தில் அடையாள அட்டையை தொங்க விட்டபடியே ஆய்வு பணிக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக