புதன், 16 டிசம்பர், 2009

வங்கி ஊழி​யர்​கள் ஸ்டிரைக்-சேவை கடும் பாதிப்பு

நாடு முழு​வ​தும் இன்று வங்கி ஊழி​யர்​கள் ஒரு​நாள் வேலை​நி​றுத்​த்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள 26 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து 5 அல்லது 6 வங்கிகளாக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. உலக அளவிலான போட்டிக்கு இந்திய வங்கிகளை தயார் செய்யும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால், இதற்கு வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மத்​திய அர​சின் இந்த நட​வ​டிக்​கை​க​ளுக்கு எதி​ரா​க​வும்,​​ ஸ்டேட் வங்கி இந்​தூரை பாரத ஸ்டேட் வங்​கி​யு​டன் இணைப்​ப​தற்கு எதிர்ப்பு தெரி​வித்​தும் பல்​வேறு ஊதிய கோரிக்​கை​களை வலி​யு​றுத்​தி​யும் இன்று ஒருநாள் வேலை ​நி​றுத்​தப் போராட்​டத்தில் வங்கி ஊழியர்கள் குதித்துள்ளனர்.
அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் ஆகியவை ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் நாடு முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்து மூடப்பட்டுள்ளன. இவர்களோடு சில தனியார் வங்கி ஊழியர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வங்கிப் பணிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக நேற்று டெல்​லி​யில் துணைத் தொழி​லா​ளர் நல ஆணை​யர்முன்​னி​லை​யில் இந்​திய வங்கி அதி​கா​ரி​கள் சங்​கத்​தின் உயர் அதி​கா​ரி​கள் மற்​றும் இந்​திய வங்கி ஊழி​யர் சம்​மே​ளன நிர்​வா​கி​கள் நடத்​திய பேச்​சு​வார்த்தை தோல்வியடைந்துவிட்டது. தங்கள் கோரிக்கைக்கு மத்​திய அரசு பணியாவட்டால் போராட்​டம் தீவி​ரப்​ப​டுத்​தப்​ப​டும் என்று இந்​திய வங்கி ஊழி​யர் சம்​மே​ள​னம் எச்சரித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக