திங்கள், 28 டிசம்பர், 2009

இஸ்ரேலின் தடையால் காஸாவில் பாதிப்பு:ஐநா விளக்கம்


மத்தியகிழக்கின் காஸா பகுதி மீது இஸ்ரேல் கண்முடித்தனமான, போர் விதிமுறைகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் மற்றும் பல பொது இடங்களும் மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளாயின.
இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு ஓராண்டு பூர்த்தி அடைகின்றது தற்போதைய நிலையில், பாலஸ்தீன நிலப்பரப்புகளில் இஸ்ரேல் தொடர்ந்து கடைபிடித்துவரும் தடைகள், அங்கே பொது சுகாதார சேவைகள் அழிந்துபோகும் ஓர் அபாய நிலையை உருவாக்கியுள்ளதாக ஐ.நா. மன்றத்தின் நிவாரணப் பணிகள் நிறுவனம் கூறுகிறது.
ஹமாஸ் காசாவில் ஜனனாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைப்பாக ஆட்ரிபுரிந்து வருகிறது. இந்த அமைப்பு காஸாவை 2007ளில் தனது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. அன்று முதல் அங்கே இஸ்ரேல் தனது தடைகளை விதித்துள்ளது.
இஸ்ரேலியத் தடைகள் காரணமாக அசுத்தமான தண்ணீர் மூலமாக பரவும் நோய்களால் குழந்தைகள் உயிரிழக்கும் என்ணிக்கை அதிகரித்துள்ளது என அந்நிறுவனம் கூறுகிறது.
காஸா தாக்குதலை நினைவுகூறும் விதமாக தாக்குதல் நடந்த 22 நாட்களுக்கும் அங்கு நினைவுக் கூட்டங்களை ஹமாஸ் நடத்தவுள்ளது. இதில் இஸ்ரேலுக்கு எதிராக ஃபாலஸ்தீன மக்களை ஓரனியில் திரட்டும் முகமாக பிரச்சாரங்கள் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக