கடந்த சிலவாரங்களுக்கு முன் டெட்ராய்ட் விமான நிலையத்தில் அமெரிக்க விமானத்தை தகர்க்க நடந்த முயற்சி தொடர்பாக நைஜீரிய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.சனி, 16 ஜனவரி, 2010
ஏமனை தாக்க நினைத்தால் தக்க பதிலடி! மதகுருக்கள் எச்சரிக்கை
கடந்த சிலவாரங்களுக்கு முன் டெட்ராய்ட் விமான நிலையத்தில் அமெரிக்க விமானத்தை தகர்க்க நடந்த முயற்சி தொடர்பாக நைஜீரிய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.நடந்த இச்சம்பவத்துக்கு அல்கொய்தாவினர் பொறுப்பேற்றனர். ஏமன் நாட்டில் இருந்தபடி அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. இதனால் ஏமன் நாட்டில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆள் இல்லாத விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கு ஏமனில் உள்ள முஸ்லிம் மத குருமார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அல்கொய்தா தீவிரவாதிகளை ஒழிப்போம் என்ற போர்வையில் ஏமன் நாட்டை தாக்க அமெரிக்க ராணுவத்தை அனுப்பினால் அமெரிக்கா கடும் எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டியுருக்கும் மேலும் அதற்கு எதிராக புனிதப்போர் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏமன் தலைநகர் ஸனாவில் நடந்த மாநாட்டில் முஸ்லிம் மதகுருமார்கள் பலர் கையெழுத்திட்டு இந்த தீர்மானத்தை நிறைவேற்றினர். ஆனால் ஏமனுக்கு ராணுவத்தை அனுப்பும் எண்ணம் இல்லை என அமெரிக்கா மறுத்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக