வெள்ளி, 22 ஜனவரி, 2010
ரேஷன் அரிசியில் கோழிக்கழிவு.
குமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பச்சரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு பின்னரே பச்சரிசி விநியோ கம் துவங்கியுள்ளது. ஆனா லும் அந்த அரிசி தரமானதாகவும் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாகர்கோவில் நகராட்சி 43 வது வார்டு பெரியவிளை பகுதியில் உள்ள அமுதம் ரேஷன்கடையில் நேற்று விநியோகம் செய்யப்பட்ட பச்சரிசியில் கோழி கழிவுகள் காணப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
புழுத்துப்போன அந்த அரிசி சாப்பிட உகந்ததாக இல்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக ரேஷன்கடை விற்பனையாளரிடம் கேட்டபோது முறையான பதில் அவர்களுக்கு கிடைக்கவில்லை. “அரிசியை நாங் கள் எங்கள் வீட்டில் இருந்து கொண்டு வரவில்லை. எங்களுக்கு தருகின்ற அரிசியைத்தான் நாங்கள் விநியோகம் செய்கிறோம்” என்றனர். இதனால் பொதுமக்கள் வேறு வழியின்றி மோசமான நிலையில் இருந்த அந்த அரிசியை யே வாங்கி சென்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ரேஷனில் தரமான அரிசியை விநியோகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

0 comments:
கருத்துரையிடுக