இதையடுத்து தவளை, கரப்பான் உள்ளிட்டவற்றை அறுத்து ஆய்வு செய்யும் முறைக்குப் பதிலாக மாற்றுத் திட்டம் ஒன்றை பரிந்துரைக்குமாறு கோரி நிபுணர் குழு ஒன்றை பல்கலைக்கழக மானியக் குழு அமைத்துள்ளது.
வெள்ளி, 22 ஜனவரி, 2010
கல்லூரி, பள்ளி லேப்களில் தவளை, கரப்பான் 'அறுவை'க்கு வருகிறது தடை
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளி அறிவியல் ஆய்வகங்களில் தவளை, கரப்பான் பூச்சி போன்றவற்றை அறுத்து ஆய்வு செய்யும் டிசெக்சன் வகுப்புகளைத் தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வரும் சாத்தியக் கூறுகள் குறித்து யோசி்க்குமாறு பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து தவளை, கரப்பான் உள்ளிட்டவற்றை அறுத்து ஆய்வு செய்யும் முறைக்குப் பதிலாக மாற்றுத் திட்டம் ஒன்றை பரிந்துரைக்குமாறு கோரி நிபுணர் குழு ஒன்றை பல்கலைக்கழக மானியக் குழு அமைத்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர் ஆர்.கே.செளகான் கூறுகையில், பேராசிரியர் ரங்கநாத் தலைமையிலான குழு ஒன்றை அமைத்து்ளோம். இந்தக் குழு மாற்றுத் திட்டம் குறித்து பரிந்துரைக்கும்.
பாஜக எம்.பி. மேனகா காந்தி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உரிமை ஆர்வலர்கள் இந்த முறையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மத்திய சுற்றுச்சூழல் துறை, இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. அதன் படி தற்போது இந்த திட்டம் மறு பரிசீலனை செய்யப்படவுள்ளது என்றார்.

0 comments:
கருத்துரையிடுக