வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

மயிரிழையில் உயிர் தப்பிய 130 துபை விமானப்பயணிகள்!

சென்னையிலிருந்து திருச்சி வழியாக துபாய் செல்லும் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நேற்று பகல் 1.35 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமான நிலையத்தில் காத்திருந்த, துபாய் செல்லும் பயணிகள் உட்பட 130 பயணிகளை ஏற்றிக் கொண்டு பகல் 2.20 மணிக்கு விமானம் புறப்பட்டது. அப்போது விமானத்தின் மீது பறவை மோதியதால், விமானத்தின் எஞ்சினில் அப்பறவை மாட்டிக்கொண்டது உடனே விமானம் நிறுத்தப்பட்டது இதனால் துபாய் செல்லும் பயணிகள் 130 பேர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்விமான நிலைய ஓடுபாதையில் விமானம் சென்று பறக்க முற்பட்ட போது, திடீரென்று பறவை ஒன்று எஞ்சினில் மோதிய வேகத்தில், விமானத்தின் இன்ஜின் அருகிலுள்ள பேன் போன்ற கருவியில் பறவை சிக்கியது.மேற்கொண்டு இயக்க முடியாததால், விமானி, விமானத்தை மீண்டும் ஓடுபாதையிலேயே இறக்கி நிறுத்தினார். 130 பயணிகளும் பத்திரமாக இறங்கினர்.பறவையை அப்புறப்படுத்த மும்பையிலுள்ள விமானம் பழுதுபார்க்கும் இன்ஜினியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பறவை அப்புறப்படுத்தப்பட்டதும் விமானம் மீண்டும் துபாய் புறப்பட்டுச் செல்லும். காத்திருக்கும் பயணிகள் அபுதாபி அல்லது சென்னையிலிருந்து வரும் மாற்று விமானத்தில் துபாய் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.விமானத்தில் பறவை மோதுவது சகஜம்:திருச்சி விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள மாமிசக் கழிவுகளை உண்பதற்காக வரும் கழுகு போன்ற ராட்சத பறவைகள் விமானங்களில் மோதுகின்றன. சராசரியாக மூன்று மாதம் ஒரு முறை விமானத்தில் பறவை மோதும் நிகழ்வு, திருச்சியில் அறங்கேறி வருகிறது.விமான நிலையத்தைச் சுற்றி ஐந்து கி.மீ., சுற்றளவில் மாமிசக் கடைகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று விமான நிலைய அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்துக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தெரிவித்து வருகின்றனர்.மனித உயிர் பலியாவதற்கு முன், உரிய நடவடிக்கை எடுத்து, விமானத்தின் மீது பறவை மோதும் நிகழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது விமான பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

0 comments:

கருத்துரையிடுக