ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி!

முழுவதும் இந்தியாவிலேயே தயாரான அணு ஆற்றல் கொண்ட எறி ஏவுகணையான அக்னி-3 வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
ஒரிசா மாநிலக் கடற்கரையோரம் உள்ள வீலர் தீவில் ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணிக்கு ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது என்றும் இச்சோதனை 100 சதவீதம் வெற்றி பெற்றது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
3,500 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடிய இந்த ஏவுகணை 1.5 டன் எடையுள்ள அணு குண்டுகளை ஏற்றிச் செல்லும் திறன் உடையது.
அக்னி 3 ஏவுகணை தொடர்ச்சியாக மூன்று முறை சோதனை செய்யப்பட்டு மூன்று முறையுமே வெற்றி அடைந்துள்ளதால் பாதுகாப்புத் துறை விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக