வியாழன், 18 பிப்ரவரி, 2010

400 முறை விதிமீறல் ரூ.45.6 லட்சம் அபராதம் கட்டிய இளைஞர்

போக்குவரத்து விதிகளை 400 முறை மீறிய துபாய் இளைஞர், அபராதமாக மொத்தம் ரூ.45.6 லட்சம் செலுத்துகிறார்.
துபாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 2008ம் ஆண்டு முதல் இதுவரை 400 முறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளார். அவரைப் பிடிக்க போலீசார் மேற்கொண்ட தொடர் முயற்சிக்கு சமீபத்தில் பலன் கிடைத்தது. விதி மீறல்களுக்காக அவர் ரூ.32.8 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.
அவர் பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர். அதை மீட்க, இளைஞர் ரூ.12.8 லட்சம் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது. மொத்தம் ரூ.45.6 லட்சம் அபராதத்தை இளைஞர் செலுத்த வேண்டியுள்ளதாக துபாயில் வெளியாகும் காலீஜ் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது

0 comments:

கருத்துரையிடுக