புதன், 17 பிப்ரவரி, 2010

அமெரிக்காவிற்க்கு ஈரான் பதிலடி!!!

சில தினங்களுக்கு முன் அமெரிக்கா ஈரான் அதிபர் அஹமது நிஜாது ஒரு சர்வாதிகாறியாக மாறிவருகிறார் என்றும், அந்நாட்டு புரட்சிப்படை அந்நாட்டை கைப்பற்ற நினைக்கிறது என்று குற்றஞ்சாட்டியிருந்தது.இதையடுத்து ஈரான் அதிபர் அஹமது நீஜாது அவர்கள் கூறுகையில்: தான் இராணுவ சர்வாதிகாரியாக மாறிருவதாக அமெரிக்க அவதூரை பரப்ப முயல்கிறது மேலும் புரட்சிப்படை ஈரானை பாதுகாக்கத்தான் செயல்படுகிறதே தவிர நாட்டை கைப்பற்ற அல்ல என்று கூறியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில் அமெரிக்கா தான் சர்வாதிகாரியாக இருந்து கொண்டு பிறர் மீது குற்றஞ்சாட்டிவருகிறது. இராக்கிலும், ஆப்கானிலும் உள்ள அப்பாவி பொதுமக்களை கொள்வதற்க்காக அமெரிக்காதான் பன்நாட்டு(nato) சிப்பாய்களை அனுப்பியதே ஒழிய இரான் அவ்வாறு செய்யவில்லை என்று இரானிய அதிபர் அஹ்மது நிஜாத் கூறியுள்ளார்.தமது நாட்டின் அணுத் திட்டத்துக்கு எதிரான புதிய தடைகளுக்கான அச்சுறுத்தல்களை நிராகரித்துப் பேசிய அவர், அத்தகைய தடைகளினால் தமது நாடு பாதிக்கப்படாது என்றும் கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக