செவ்வாய், 23 மார்ச், 2010
ஆயுத இறக்குமதி! உலகின் 4 வது இடத்தில் சவூதி அரேபியா, 6 வது இடத்தில் இஸ்ரேல்!
சவூதி அரேபியா உலக நாடுகளிலேயே அதிக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நான்காவது மிகப்பெரிய நாடாக இருப்பதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. "ஸ்டாகோம் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்" (SIPRI) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் சைனா, இந்தியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் சவூதி அரேபியா இருப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த 2005 முதல் 2009 ஆம் ஆண்டு வரை சவூதி அரேபியா மொத்தம் 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஆயுதங்கள் வாங்குவதற்காக பயன் படுத்தியுள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆயுத இறக்குமதியில் இஸ்ரேல் ஆறாவது இடத்தில் உள்ளது. அதைவிட சவூதி அரேபியா நான்காவது இடத்தில் முன்னணியில் உள்ளது. மேலும் அமெரிக்காவிடமிருந்துதான் பெரும்பாலான ஆயுதங்களை வாங்கி வந்தது. இதனால் அமெரிக்காவின் மூன்றாவது மிகப்பெரிய ஆயுத இறக்குமதி வாடிக்கையாளராக சவூதி அரேபியா திகழ்கிறது.மேலும் பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி வாடிக்கையாளராகவும் சவூதி அரேபியா இருக்கிறது.
0 comments:
கருத்துரையிடுக