திங்கள், 22 மார்ச், 2010
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நாளை தொடக்கம்: 8.5 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகின்றன. இந்தத் தேர்வை 8.5
லட்சம் மாணவ-மாணவிகள் எழுதவுள்ளனர். பிளஸ்-2 தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி
இன்றுடன் முடிவடைந்தன. இந் நிலையில், எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரிகுலேஷன்,
ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல் 10ம் வகுப்பு தேர்வுகள் நாளை
தொடங்குகின்றன. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 2,791 தேர்வு மையங்களில் 6,493
பள்ளிகளை சேர்ந்த 8,56,956 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதில் 4,22,523 பேர்
மாணவர்கள். 4,34,443 பேர் மாணவிகள்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தனித்
தேர்வர்களும் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 14,618 பேர்
கூடுதலாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகி்ன்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது. அதே போல மெட்ரிகுலேஷன் 10ம் வகுப்பு தேர்வை 1,476
மையங்களில் 3,138 பள்ளிகளைச் சேர்ந்த 1,30,020 பேர் எழுதுகின்றனர். இவர்களில்
71,714 பேர் மாணவர்கள். 58,256 பேர் மாணவிகள். ஆங்கிலோ-இந்தியன் தேர்வை
4,492 பேரும், ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,593 பேரும்
எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஏப்ரல் 7ம் தேதி
முடிவடைகின்றன. மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன் தேர்வுகள் ஏப்ரல் 9ம் தேதியும்
முடிவடைகின்றன.
0 comments:
கருத்துரையிடுக