செவ்வாய், 2 மார்ச், 2010

மன்மோகன் சிங்கிற்கு டாக்டர் பட்டம்: ரியாத் பல்கலைக்கழகம் கழகம் வழங்கி கெளரவித்தது

பிரதமர் மன்மோகன் சிங் குக்கு கிங் சாத் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிக் கெளரவித்தது. ரியாத்தில் உள்ள கிங் சாத் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமருக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் பேசுகையில், கல்வித்துறையில் இரு நாடுகளும் மேலும் நெருக்கமான முறையில் செயல்பட வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் கல்விப் பரிமாற்ற உறவுகள் ஆயிரம் ஆண்டு பழமையானவை. இது சமீப காலமாக தேய்ந்து போய் விட்டது. இதை மறு சீரமைத்து மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.

0 comments:

கருத்துரையிடுக