வியாழன், 25 மார்ச், 2010

முஸ்லி்ம்களின் இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது!


புதுடெல்லி: பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில், முஸ்லிம் சமூகத்தினருக்கு 4  சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி ஆந்திர மாநில அரசு பிறப்பித்த உத்தரவு செல்லுபடியாகும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
தலைமை நீதிபதி கே.ஜி பாலகிருஷ்ணன் தலைமையில் ஜே.எம் பாஞ்ச்சல் பி.எஸ் சவுஹான் ஆகிய நீதிபதிகள் அடங்கிய பென்ச் 2007 ஆம் ஆண்டு  இயற்றப்பட்ட இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 14 பிரிவினருக்கு இந்த சட்டம் பொருந்தும் என்று தீர்ப்பளித்தது. இதற்கு முன்னர் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பென்ச் ஆந்திர மாநில உயர்நீதி மன்றம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் இது ஆர்டிகிள் 14 ஐ மீறுவதாக உள்ளது என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.

0 comments:

கருத்துரையிடுக