புதன், 3 மார்ச், 2010

சாமியார் நித்தியானந்தமும், நடிகை ரஞ்சிதாவும் உல்லாசமாக இருக்கும் காட்சி: தமிழகம் முழுவதும் பரபரப்பு!

பிரபல சாமியார் நித்தியானந்தா, தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவி்ல், நடிகை ரஞ்சிதாவும் நித்யானந்தாவும் ஒரு அறையில் உள்ளனர். புடவையுடன் இருக்கும் ரஞ்சிதா சாமியாருடன் நெருக்கமாக படுக்கையில் புரளுகிறார்.
பின்னர் விளக்குகள் அணைக்கப்படுகின்றன. அடுத்தக் காட்சியில் நடிகை ரஞ்சிதா வெள்ளை நிற சுடிதாரில் சாமியார் இருக்கும் அறைக்கு வருகிறார். நித்யானந்தாவுக்கு மாத்திரையும் காபியும் கொடுக்கிறார். பின்னர் இருவரும் படுக்கையில் உருண்டு கொஞ்சி குலாவுகின்றனர். மீண்டும் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.
தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ எப்போது எப்படி எங்கே எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. நாடோடித் தென்றல் படத்தி்ல் அறிமுகமான ரஞ்சிதா தொடர்ந்து அமைதிப் படை, ஜெய்ஹிந்த் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு திருமணம் நடந்தது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது. கணவரைப் பிரிந்த ரஞ்சிதா மன அமைதி தேடி நித்யானந்தத்தின் ஆசிரமத்துக்கு செல்ல ஆரம்பித்துள்ளார். அப்போது தான் ரஞ்சிதாவை வளைத்துப் போட்டுள்ளார் நித்யானந்தம். இதைத் தொடர்ந்து இருவரும் மிக நெருக்கமாகிவிட்டார் என்கிறார்கள்.
ரஞ்சிதா தவிர மேலும் சில நடிகைகளுக்கும் நித்யானந்தனந்துடன் தொடர்பு உள்ளதாகத் தெரிகிறது.

0 comments:

கருத்துரையிடுக