”இரு நாடுகளும் பல்லாண்டுகளாகப் பேசித் தீர்க்க முடியாததை உலக வெப்பம் (global warming) சாதித்து வி்ட்டது” என்று அவர் கூறினார்.
வியாழன், 25 மார்ச், 2010
கடலில் மறைந்த தீவு!
கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையே உரிமைப் பிரச்சனையில்
சிக்கியிருந்த மிகச் சிறிய தீவொன்று வங்காள விரிகுடாக் கடலில் மூழ்கி மறைந்தது.
நியூ மூர் (New
Moore) எனப்படும் இந்தத் தீவு முழுவதும் நீருக்கடியில் மூழ்கி விட்டதாகக் கடல்
ஆய்வியளாளர் சுகதா ஹஸ்ரா (Sugata Hazra) தெரிவித்தார். இவர் கொல்கத்தாவிலுள்ள
ஜாதவ்பூர் பல்கலையின் பேராசியர் ஆவார். செயற்கைக் கோள் படங்கள் மற்றும் கடல்
ரோந்துப் பணியாளர்களின் வாயிலாகவும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்
தெரிவித்தார்.
”இரு நாடுகளும் பல்லாண்டுகளாகப் பேசித் தீர்க்க முடியாததை உலக வெப்பம் (global warming) சாதித்து வி்ட்டது” என்று அவர் கூறினார்.
உலகம் வெப்பமயமாகி
வருவதன் காரணமாய் மிகவும் கவலைக் கொள்ளத் தக்க வகையில் வங்காள விரிகுடாவில் கடல்
நீர் மட்டம் கடந்த பத்தாண்டுகளில் உயர்ந்துள்ளதாக கடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள
விஞ்ஞானிகள் தெரிவத்துள்ளனர். 2000 ஆண்டு வரை வருடத்திற்கு 3 மி.மீ உயர்ந்து வந்த
நீர் மட்டம் கடந்த பத்தாண்டுகளாக வருடத்திற்கு 5 மி.மீ. உயர்ந்து வருவதாக அவர்கள்
கூறினர்.
0 comments:
கருத்துரையிடுக