வியாழன், 18 மார்ச், 2010

ஈரான் அணுசக்தி மையங்களை தகர்க்க அமெரிக்கா திட்டம்!

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள இங்கிலாந்து தீவுப் பகுதியான டீகோ கார்சியாவில் அமெரிக்க விமானப்படைத் தளம் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான ‘387 பங்க்கர் பஸ்டர்’ ரக குண்டுகளை அமெரிக்க அனுப்பி வருகிறது.
இது தவிர கப்பல் மூலமாகவும் ஆயுதங்களையும் அனுப்பியுள்ளது. இதில் 195 ஸ்மார்ட் ப்ளூ&110 குண்டுகள், 192 ப்ளூ&117 குண்டுகள், 2,000எல்.பி குண்டுகளையும் அமெரிக்கா அனுப்பியுள்ளது. ஈரானின் அணுசக்தி மையங்கள் எல்லாம் பாதாளத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவற்றை தகர்ப்பதற்காக அமெரிக்க இந்த குண்டுகளை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்துள்ள பேட்டியில், ‘‘ஈரானிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இதனால்தான் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என உலகநாடுகளை கேட்டுக் கொண்டுள்ளேன்’’ என்றார். 

0 comments:

கருத்துரையிடுக