போதைப் பொருள் பதுக்கல், தரிசனம் என்ற பெயரில் பக்தர்களிடம் கோடிக்கணக்கில் பறித்தது போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள கல்கி சாமியாரின் பிரமாண்ட ஆசிரமத்தின் ஒரு பகுதியை அடித்து நொறுக்கினர் பொதுமக்கள். மாடர்ன் சாமியார்களுக்கு இது போதாத காலம். ஏதாவது ஒரு வழியில் மீடியாவிடம் அல்லது மக்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.வியாழன், 4 மார்ச், 2010
ஆந்திர சாமியார் கல்கி பகவான் போதைப் பொருள் பதுக்கல், பல கோடி ரூபாய் மோசடி – ஆசிரமம் சூறை.
போதைப் பொருள் பதுக்கல், தரிசனம் என்ற பெயரில் பக்தர்களிடம் கோடிக்கணக்கில் பறித்தது போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள கல்கி சாமியாரின் பிரமாண்ட ஆசிரமத்தின் ஒரு பகுதியை அடித்து நொறுக்கினர் பொதுமக்கள். மாடர்ன் சாமியார்களுக்கு இது போதாத காலம். ஏதாவது ஒரு வழியில் மீடியாவிடம் அல்லது மக்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.கடந்த சில ஆண்டுகளாக பல விசித்திரமான செய்கைகள் மூலம் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தவர் விஜய்குமார் நாயுடு என்ற கல்கி பகவான். தன்னை கல்கி அவதாரம் என்றும், தன் மனைவியை அம்மா பகவான் என்றும் கூறிக் கொண்டு பல இடங்களில் பிரமாண்ட ஆசிரமங்களை எழுப்பியுள்ளார்.
ஆந்திர மாநிலம் தடா அருகில் வரதையபாளையத்தில் பிரமாண்டமான ஆசிரமத்தைக் கட்டியுள்ள இந்த விஜய்குமார் நாயுடு, தன்னைக் காண வரும் பக்தர்களிடம் கட்டாய கட்டணமாக ரூ 5000 வரை பெறுகிறார். சிறப்பு தரிசனத்துக்கு ரூ 25000 கட்டணம் வசூலிக்கிறார். ஹோமம் செய்ய ரூ 60000 கட்டணம் செலுத்த வேண்டுமாம்.
வெளிநாட்டிலிருந்து வரும் விருந்தினர்களை 21 நாள் பேக்கேஜ் என்ற திட்டத்தின் கீழ் தங்க வைத்து போதை மருந்து உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத கேளிக்கைகளை வழங்கு கிறார்களாம் இந்த ஆசிரமத்தில். அம்மா பூஜை என்ற பெயரில் மட்டும் ரூ 240 கோடியும், விஜய்குமார் நாயுடுவின் மகன் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பக்தர்களை ஏமாற்றி ரூ 3000 கோடியும் வரையும் ஏமாற்றிவிட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. விஜய்குமார் நாயுடு நடத்தும் 9 நிறுவனங்களின் மீதும் புகார்கள் தரப்பட்டுள்ளன.
இது தவிர, ஏராளமான பெண்கள் வரவழைக்கப்பட்டு, வெளிநாட்டவர்களுக்கு விருந்தளிக்கப் படுவதாகவும் வரதையபாளையம் போலீஸில் புகார் செய்துள்ளனர் அப்பகுதி மக்கள்.
பூந்தமல்லியை அடுத்த நேமத்தில் உள்ள கல்கி ஆசிரமத்தின் மீதும் இதுபோன்ற புகார்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் அரசியல் செல்வாக்கு காரணமாக விஜய்குமார் நாயுடு மற்றும் அவர் மனைவியை போலீசாரால் விசாரிக்க முடியவில்லையாம். இவை அனைத்தையும் உள்ளூர் ஆந்திர டிவி ஒன்று தொடர்ந்து செய்தியாக வெளியிட்ட வண்ணமிருந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று வரதையபாளையம் ஆசிரமத்தின் தொழில்நுட்ப மையத்தை அடித்து நொறுக்கினார்கள். அங்கிருந்த அனைத்துப் பொருள்களையும் உடைத்தவர்கள், ஆசிரமம் என்ற போர்வையில் இங்கு நடக்கும் அசிங்கங்களை இனியும் அனுமதிக்க முடியாது என்றனர். மக்களை ஏமாற்றி விஜயகுமார் நாயுடு சம்பாதித்த பணம் முழுக்க திரும்பச் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆசிரமத்தில் போதைப் பொருள் ஏராளமாய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், இங்கு தரப்படும் பிரசாதமே போதைப் பொருள் கலந்ததுதான் என்றும் குற்றம்சாட்டினர்.
உடனடியாக போலீசார் வரவழைக்கப்பட்டனர். கலாட்டா செய்தவர்களை போலீஸ் விரட்டியடித்தது. இந்த நிகழ்ச்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.ஆனால் ஆசிரமம் தரப்பில் இதற்கு எந்த விளக்கமும் தரப்படவில்லை.
0 comments:
கருத்துரையிடுக