திங்கள், 22 மார்ச், 2010

கூகுள் அமெரிக்காவிற்கு உளவு பார்க்கும் நிறுவனம் - சீனா

இணையதளங்களிலும் சர்ச் என்ஜின்களிலும் உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் கூகுள் நிறுவனம், அமெரிக்காவின் உளவு நிறுவனம் என சீனா குற்றம் சுமத்தியுள்ளது. "கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் தங்கள் சேவைகள் மூலமாக பரிமாறப்படும் தகவல்களைச் சேகரித்து அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கு வழங்கி உளவு வேலை பார்ப்பதாக" கூகுள் நிறுவனம் மீது சீனா குற்றம் சாட்டுகிறது. கூகுள் அமெரிக்க உளவு நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதாகவும், தனது இணைய தேடல் மூலம் சேகரிக்கும் தகவல்களை
அது அந்த உளவு நிறுவனங்களுக்கு வழங்குவதாகவும், சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்குவா கூறியுள்ளது. சீனாவின் கலாச்சாரத்தில் ஊடுருவி அதை சிதைப்பதற்கு அமெரிக்காவிற்கு கூகுள் தேடுபொறி உதவுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது. தற்போது சீனாவில் கூகுள் நிறுவனத்தின் மீது தணிக்கை இருப்பதால் கூகுள் அங்கிருந்தது வெளியேற முடிவெடுத்து வரும் வேளையில் சீனா இவ்வாறு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக