வெள்ளி, 12 மார்ச், 2010
நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு
நெல்லையில் இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நடந்தது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 62ம் ஆண்டு சமுதாய மறுமலர்ச்சி மாநாடு மேலப்பாளையம் ஜின்னா திடலில் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.
இன்று காலை 9 மணி முதல் 12.30 மணி வரை மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்குக்கு பாத்திமா முஸப்பர் தலைமை வகிக்கிறார். குடும்ப, மருத்துவ கல்வி விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு மேலப்பாளையம் விஎஸ்டி பள்ளிவாசல் முன்பிருந்து தொடங்கிய சமூக நல்லிணக்க பேரணியை எம்கேஎம் முகமது ஷாபி துவக்கி வைத்தார். பேரணியில் உலமாக்கள், இளைஞர்கள் பங்கேற்றனர்.
0 comments:
கருத்துரையிடுக